Sunday, January 26, 2025

FlashBack _ tamil _ रौशन दी हट्टी।

 रौशन दी हट्टी।

 ஒளி கொடுத்தது

            கடை.

++++++++++++++++++++

 ஒளிரும் கடை

எனக்கு 

 எந்த மாயா நகரத்தையும் விட குறைந்ததல்ல.

அங்கு பல வண்ண மிட்டாய்கள்

சாக்லேட் லாலிபாப்

 உருண்டைகள்

வண்ண வண்ண காகிதங்களிலும்

தங்க காகிதங்களாலும் 

சுருட்டி வைக்கப்பட்டு

 மகிழ்ச்சி தரும் படி இருக்கும்.

மேலும் நான் பள்ளி 

 குதிரைவண்டியில் அமரும் முன்

தினந்தோறும் 10-20 ரூ மிட்டாய் உருண்டைகள்

வாங்குவேன்.

மிகவும் மகிழ்ச்சியாக வண்டியில் அமர்வேன்.


இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு 

ஒளிரும் கடை முன் நிற்கிறேன்


வெள்ளையான கடை முதலாளி 

இப்போது கிழவனாகிவிட்டான்.

அவன் என்னைத் தெரிந்து கொள்ள வில்லை.

நான் எனது மனம் விரும்பிய 

 பல விதமான மிட்டாய்கள் வாங்கி னேன்.

இராமலீலா மைதானம் சென்று 

கிட்டிப்புல், கிரிக்கட் விளையாடும்  குழந்தைகளுக்கு வழங்கினேன்.

 இனிப்புகளை  அவர்கள் வாயில் போட்டு சுவைத்து 

மகழ்ந்து தன் விளையாட்டில ஈடுபடடனர்

 நான் அங்கு கதிரவன் மறையும் வரை உட்கார்ந்திருந்தேன்.

அவர்கள் விளையாட்டையும்

 சிரித்த முகத்தையும் பார்த்தேன்.

தரையில் சிதறிக்கிடந்த பல தங்க நிற காகிதங்கள் 

பிரகாசித்துக் கொண்டிருந்தன.

அதில் என்  குழந்தைப் பருவ நினைவுகள்.

கவிஞர் இந்துகாந்த்

ஆங்கிரஸ்.

தமிழ் மொழி  ஆக்கம் :--

பழனி 

சே. அனந்த கிருஷ்ணன்.

No comments:

Post a Comment