कोचवान मानसिंह।
குதிரை வண்டிக்காரன்
மான்சிங்.
++++++++++++++++++
என் குதிரை வண்டி ஓட்டுபவர் மான் சிங்.
நடுத்தர உயரமுள்ள குண்டான உருவம்.
கருமை நிறம்
தலையில் நேரு வெள்ளைகுல்லாய்.
சட்டை வேஷ்டி
நல்ல அழகு.
இடது பக்க நெற்றியில்
இடது பக்கம் அழுத்தமான சப்பை.
வாயில் எப்பொழுதும் வெற்றி லை அல்லது குட்கா.
ஒருகையில் சாட்டை
ஒரு கையில் மூக்கணங்கயிறு.
சீதாராமன் கடைத்தெருவில் இருந்து
துர்க்மான நுழைவாயில் வரை
குதிரை வண்டி பயணம்
மிகவும் சிலிர்ப்பூட்டும்
குதிரை வண்டிக்காரன்
வேகமாக
கயிற்றை ஆட்டி
ஓரம் ஓரம் சற்று நகருங்க பாபுஜி
மௌலாஜீ , பீபி
சகோதரி
வண்டி அம்பு போல்
முன்னே செல்லும்.
வழிப் போக்கர்கள் உடனே வழி விடுவர்.
ஓரமாக நகர் வார்கள்.
துர்க்மான நுழைவாயில் கடந்ததுமே
வண்டி பாலபவனத்தில்.
காலியான சாலையில்.
ஓடும் .
20 நிமிடத்தில்
ராஜ் அவின்யு
ஆந்திரா பள்ளி நுழைவாயில்
வண்டியில் ஷா இருந்து குதித்து
பள்ளி படிகளில்.
இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு
பள்ளி பணிகளுக்கு எதிரில்
நின்று கொண்டிருக்கிறேன்.
பள்ளி நேரம் முடிந்து விட்டது.
குழந்தைகள் ஸ்கூட்டரில்,
கார்களில்
பள்ளிப் பேருந்தில்
தன் தன் வீட்டிற்குத்
திரும்பிக் கொண்டிருந்தனர்.
இப்போது குதிரை வண்டி இல்லை.
குதிரை வண்டிக்காரன் மான் சிங் இல்லை.
அவனுடைய குதிரை இல்லை.
சாட்டை இல்லை மூக்கணாங் கயிறு இல்லை
பள்ளிப் பேருந்தில்
அமைதியாக குழந்தைகள் அமர்ந்திருக்
கிறார்கள்.
No comments:
Post a Comment