बर्फ़ के गोले।
பனிக்கட்டி உருண்டை.
++++++++++
கோகுல் ஷாஹ் பகுதி நடைபாதையில்
பனிக்கட்டி உருண்டை இருக்கின்ற
பனிக்கட்டி வண்டி .
நீலம் , மஞ்சள் , சிவப்பு , ரோஜாப்பூ
வண்ண வண்ண
(சர்பத்) குளிர்பான புட்டிகள்.
அவனுடைய ஐஸ் வண்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வண்டிக்கு நடுவில் ,
ஐஸ் தூள் செய்யும்
தட்டையான கட்டை.
ஐஸ் உருண்டையில் தனியான ஆனந்தம்.
வெள்ளை ஐஸ் உருண்டையில்.
வண்ண வண்ண சர்பத் ஊற்றப்படும்.
அதை எடுத்து நான்
ருசித்து சப்புவேன்.
வீட்டிற்குத் திரும்புவேன்.
வீட்டை அடையும் போது
ஐஸ் உருண்டை
மறுபடியும் வெண்மையாக மாறியது.
வாழ்க்கையில் விதவிதமான
நூற்றுக்கணக்கான
ஐஸ்க்ரீம் நூற்றுக் கணக்கில் சாப்பிட்டேன்.
ஆனால் அந்த ஐஸ் உருண்டை ஆனந்தம் ருசி கிடைக்கவேயில்லை.
---------
கவிஞர்:--
இந்து காந்த் ஆங்கிரஸ்.
தமிழ்
பழனி
சே. அனந்த கிருஷ்ணன்
.
No comments:
Post a Comment