Wednesday, September 4, 2024

Flash Back - Tamil _ ताँगा --குதிரைவண்டி.

 ताँगा --குதிரைவண்டி.


வீட்டில் இருந்து பள்ளிவரை

  குதிரை வண்டி பயணம்.

மிகவும் மனம் விரும்பும்  நிகழ்ச்சி.

 ஒருநாள் அதிக நேரம் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தேன்.

 குதிரை வண்டியைத் தவறவிட்டேன்.

மிகவும் வருத்தத்துடன் பாதை ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன்.

 பிறகு ஒரு  மிதிவண்டியில் செல்லும் மாமாவிடம் 

 உதவி கேட்டேன்.

 அவரும் மிவண்டி முன் கம்பியில் அமரவைத்து 

நலமாக துர்கமான் நுழை வாயிலில் நலமாக இறங்கிவிட்டார்.

அங்கிருந்து நடந்து வீட்டை அடைந்தேன்.

அந்த நாள் என் பாட்டி

 நன்றாக மிரட்டினார்.

தாமதமாக வீட்டை அடைந்ததற்கு.

நான் குதிரை வண்டி 

தவறவிட்டதைக் கூறவில்லை.

 குதிரைக்கு காய்ச்சல் அதனால் வண்டி தாமதமாக வந்தது என்று கூறினேன்.

அடுத்த நாள் எனக்கு

 காய்ச்சல் வந்து விட்டது.

No comments:

Post a Comment