வைத்தியர் वैद्य
84 மணி நேர ஆலயம் எதிரில்.
ஆயுர் வேத மருந்தகம்.
வைத்தியர் பெயர் கைலாஸ் சந்த்.
இன்றும் நினைவில் புதிதாக இருப்பவர்.
வெள்ளை நிறம்
நீண்ட கழுத்து
நேரு தொப்பி. சட்டை வேஷ்டி.
பணிவானவர் மென்மையாகப் பேசுவர்
அடிக்கடி அவரிடம்வயிற்று
வலி சாக்கு சொல்லி
போவேன்.
அவர் விசித்திரமான எழுத்தில் மருந்து சீட்டு எழுதித் தருவார்.
அவருடைய மருந்தாளுனர் புதிய
சூரணம் பொட்டலம் கட்டி கொடுப்பார்.
சூரணம் நக்கி சாப்பிடுவதில் எனக்கு மகிழ்ச்சி.
சூரணம் பொட்டலம் ஜேப்பில் வைத்து மகிழ்ச்சியாக வீடு திரும்புவேன்
No comments:
Post a Comment