कबूतर
புறா.
என் வீட்டின் பால் கனியில் இருந்து,
பத்தடி தூரத்தில்
எதிர் வீட்டின்
உயர்ந்த மாடி.
மாலை நேரத்தில்
வண்ண வண்ண புறாக்கள் அங்கிருந்தே பறக்கும்.
ஒரு குழுவாக பறக்கும்.
ஒரு கிலோமீட்டர்
தொலைவில்
மற்றொரு புறாக் கூட்டம்
ஆகாயத்தில்
இணையும்.
பிறகு அந்த புறாக்கள்
திரும்பி வரும்
விளையாட்டு துவங்கும்.
அந்த புறாக்களின்
உரிமையாளர்கள்
அதை அழைப்பார்கள்.
வா வா வா
என்று மிகவும் சத்தமாக.
விசில் அடிப்பார்கள்.
இரண்டு நிமிடத்தில்
புறாக் கூட்டம்
தங்கள் தங்கள் எஜமானரிடம் வந்து சேரும்.
மாடியில் இறங்கியதும் எண்ணத் தொடங்குவர்.
ஒரே பார்வையில் வேறு குழு புறாக்கள்
தங்களிடம்
வந்ததை அறிவர்.
அப்போது உண்மையான
எஜமானருக்கு
பெரிய தொகை
கொடுக்க வேண்டும் .
எப்படி கட்சி மாறி
தலைவர்களுக்கு
பெருந்தொகை
அளிக்கப் படுகிறதோ அப்படி.
சே. அனந்த கிருஷ்ணன்.சென்னை
No comments:
Post a Comment