ஹோலி
+++++++++
இரண்டு வாரங்களுக்கு முன்பே,
ஹோலியின் ஆராவாரம் ஆரம்பம்.
பழைய தில்லியின் தெருக்களில்
ஹோலியின் வண்ணங்கள் சிதறத் தொடங்கும்.
விழா துவங்கும் இடத்தில் புரசுப் பூக்கள் நிரம்பி இருக்கும்.
தண்ணீர் சிவப்பாக மாறி இருக்கும்.
பல வண்ணங்களில் கரைசல் செய்யப் பட்டிருக்கும்.
பிறகு பீச்சாங்குழலில் நிரம்பப்படும்.
பலூன்களில் வண்ண நீர்களால்
வாளி நிரப்பப்படும்.
போருக்கு ஆயுதங்கள் தயாராக வைப்பது போல் ஏற்பாடுகள் நடக்கும்.
உருளைக் கிழங்கை பாதியாக வெட்டி
அது தோண்டப்படும்.
420 முத்திரை போடப்படும்.
வழிப் போக்கர்களின்
சட்டையில்
பித்தளை பீச்சாங்குழலில் வண்ணங்கள் பீச்சி அடிக்கப்படும்.
வண்ண நீர் தெளிக்க பண்பாடும்.
தகர டப்பாக்களை
கயிற்றில் கட்டி
காலைத் தொட்டு இழுக்கப்படும்.
அப்போது நாய் குறைக்கும் ஓசை கேட்கும்.
வழிப்போக்கர்களை
அச்சுறுத்தும்.
அடுத்த நிமிடமே ஹோலி ஒலி கேட்டு
சஹஜமாகி
விடுவார்கள்.
பழைய விரோதம் போய்விடும்.
ஆனால் இன்று அன்பு நிறைந்த வண்ணங்கள் பீச்ச அச்சம் உண்டாகும்.
விரோதி விரோதியாகவும்
நண்பர்கள் விரோதியாகவும் ஆகின்றனர்.
ஒவ்வொரு முகமும்
ஹோலி வண்ணம் ஏற்காமல் இருக்காது.
ஒருவருமே ஹோலி
கிராமியப் பாடல் பாடுவதில்லை.
No comments:
Post a Comment