मघई
மயக்க பீடா.
++++++++++++
அந்த நாள்
அந்த மாலை
என்ன என்று கூறுவது?
நானும் என் நண்பன் ராகேஷ் மித்தல் இருவரும்
சேர்ந்தே
120 பீடா
போடுவோம்.
(அவன் 01-01-1979ல் சாலை விபத்தில் இறைவனடி
சேர்ந்தான்)
மயக்க பீடா
குளிர்கால
மாலையில்
பீடாவை வாயில் அமுக்கி வைத்து
வெகு நேரம் சுற்றுவோம்.
பகவதி பீடா கடை
காசியாபாத் காந்தி நகரில் இருந்தது.
அடிக்கடி பீடா
போட போவோம். கடனில்.
தில்லி வானொலி நிலையத்தில் இருந்து
கவிதை பாடம்.
விருப்பப் பாடல்கள் நிகழ்ச்சி.
நேயர் விருப்பம்.
அப்போது
ரூ 75/க்கான காசோலை கிடைக்கும்.
பீடா கடை கடன்
ஊர் சுற்றுவது
அந்நாட்களின் ஆனந்தம்.
என் வாழ்க்கையின்
அழகான சுற்று. வாழ்க்கையில்
அதிக ஆண்டுகள் வரை
ஜர்தா பீடா போட்டுக் கொண்டே இருந்தேன்.
ஆனால்
கடனில் சாப்பிட்ட
மயக்க பீடா மணம்
இன்றும்
வாயில் புத்தம்
புதியதாக
மணக்கிறது.
No comments:
Post a Comment