मेरे नाना
என் தாத்தா
(அம்மா வின் அப்பா)
தில்லியில் முதல்
கடைசல் இயந்திரம் அமைத்தவர்
லாலா ஜயதயால் தானி,என் தாத்தா.
அஜ்மேரி நுழைவாயிலில்
அவருடைய தொழிற்சாலை.
அவர் பெயர் தில்லி தனவந்தர்களின்
எண்ணிக்கையில் இருந்தது.
வருடம் 1940லேயே
குதிரை வண்டியும
மகிழுந்தும் இருந்தன.
இந்தியாவின் நுழைவாயிலைச் சுற்றிப் பார்க்க
அவர் குடும்பம் இந்த
வாகனங்களில் செல்லும்.
இப்போது ஏழைகள் ஆகிவிட்டனர்.
இரண்டு மாடி வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
தெருக்குழாயில் இருந்து அவருக்கு
ஜாடியில் தண்ணீர் கொண்டு வருவார்கள்.
அவர் கதை மிகவும் வேதனை மிக்கது.
இப்போதும் அவர் பிரம்பு தடி எடுத்துக் கொண்டு தொப்பி வைத்து தெருவில் வருகிறார்,
பேரிச்சம்பழம் கொண்டு வருகிறார்.
இப்போது அவரை ஐயா என்று யாரும் சொல்வதில்லை.
அவருடைய பெரிய கடை விற்கப்பட்டது.
அவர் தொழிற்சாலை விற்கப்பட்டது.
தாத்தா தன் புன் சிரிப்பை மறந்து விட்டார்.
தில்லியின் பெரிய பணக்காரர்
எப்படி புகழ் இல்லா
ஏழையானார்
என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறேன்.
இன்று அவருடைய பெயர் ஒருவர் நினைவிலும் இல்லை.
++++++++++
No comments:
Post a Comment