Wednesday, February 5, 2025

Flash Back _ Tamil_ शतरंज

 शतरंज 

சதுரங்கம்.

++++++++++


மிகவும்  சிறிய  வயதில் 

 கற்றுக் கொண்டேன்

சதுரங்கம்.



 

 குழந்தைப் பருவத்தில் 

மணிக்கணக்கில் 

 விளையாடுவேன்

சதுரங்கம் என்

நண்பர்களுடன்.

முதலில் உள்நாட்டு 

பின்னர் பன்நாட்டு சதுரங்கம் கற்றேன்.


 அடிக்கடி என் நண்பர்களைக்

 தோற்கடிப்பேன்.


 பிறகு வாழ்க்கையின்

ஓட்டத்தில்

 சதுரங்கம் பின் தங்கி விட்டது.

 நான் புடாபேஸ்ட் 

 வெளிநாட்டில் வசிக்கும் போது


ஒரு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் 

சிலர் சதுரங்கம் பலகை விரித்து 

 சிலர் உட்கார்ந்திருந்தனர்.

வழிப்போக்கர் களை விளையாட அழைத்துக் கொண்டிருந்தனர்.

 ஒரு பந்தயத்திற்கு 100 ஃபோரின்ட்.

நான் ஒரு விளையாட்டு வீரருடன் விளையாட


 ஆரம்பித்தேன்.

தொடர்ந்து இருமுறை 

தோற்று விட்டேன்.

 என் சட்டை ஜோப்பியில் பல இருந்து 

200 ஃபோரின்ட்

  குறைந்துவிட்டது.

விசாரித்ததில் 

 அவர்கள் தொழிலே  அதுதானாம்.


பெரும்பாலும் ஒரே நாளில் ஆயிரம் ஃபோரின்ட்  சம்பாதிப்பார்கள்.


 இப்பொழுதும் எப்பொழுதாவது 

சதுரங்கம் விளையாடுகிறேன்.

அந்த நாளை நினைக்கிறேன்.


+++++++++++

ஹிந்தி மூலம் 

இந்து காந்த் காங்கிரஸ்.

 தமிழாக்கம் 

 பழனி சே. அனந்த கிருஷ்ணன்

No comments:

Post a Comment