रतन स्टेशनर्स
ரதன் எழுது பொருள் அங்காடி.
சூடிவாலான் நடைபாதையில்
ரதன் எழுது பொருள் அங்காடைக்கு
போக வேண்டியிருக்கும்.
கிட்டத்தட்ட தினந்தோறும்
எழுகோல்,குறிப்பேடு
அழிப்பான் வாங்க
மைக்கோல் வாங்க
மைக்கோல் முனை வாங்கப் போக வேண்டும்.
பட்டுச் சட்டையில்
வெள்ளி பொத்தான்
தங்கச் சங்கிலி
தொங்கவிட்ட
ரதன் பாபு,
மைக்கோல் சரி செய்வதில் வாத்தியார்.
நான் அடிக்கடி என்னுடைய அப்பாவின் பேனா சரிசெய்யும் போவது வழக்கம்.
அந்தக் காலத்தில் பந்து முனை மைக்கோல் நடைமுறையில் இல்லை.
மைக்கோல் பேனா தான் அதிகம் பயன்பாடு.
மைக்கோலுக்காக மை , முனை அடிக்கடி
வாங்கப்படும்.
மைக்கோலில் மை நிரப்பப்படும்.
அப்போதுதான் தாளில் எழுதமுடியும்.
பல ஆண்டுகள் ஷா அது பயன் படுத்தப்படும்.
அந்த முனையுள்ள மைக்கோல்
வண்ணவண்ண மாறாது
அதனுடன் உணர்ச்சி மிக்க சம்பந்தம்.
நன்றாக கவனத்துடன் கண்காணிக்கப்படும்
மைக்கோல்.
மேசை மீதும்
மரப் பெட்டியிலும்
வைக்கப்படும்.
மெதுவாக முனையுள்ள மைக்கோலின் இடத்தை
பந்து முனை மைக்கோல் பிடித்துக் கொண்டது.
இன்று ஐந்து ரூபாயில் பந்துமுனைமைக்கோல்
எழுதிஎழுதித் தீர்ந்த பின்
இரக்கமின்றி தூக்கி எரியப் பட்டு மறக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அந்த மைக்கோல் விலை உயர்ந்தது.
அந்த மைக்கோல் இன் முனையும் மையும் தாளில் சாட்சியாக இருக்கும்.
என்கவிதைகளில்
இறங்கி.
ஹிந்தி மூலம்
இந்து காந்த் காங்கிரஸ்.
தமிழ்
பழனி சே.அனந்த
கிருஷ்ணன்
சென்னை.
No comments:
Post a Comment