कैरम बोर्ड
கண்டாட்டம் ( பலகையாட்டம்)
குழந்தைப் பருவத்தில்
மணிக்கணக்கில்
விளையாடுவேன்
கண்டாட்டம். (Carrom board)
என் மாமாவுடனும் தாய் வழி மாமா சகோதரனுடனும்
அடிக்கடி இரவு உணவுக்குப்பின்
கருப்பு வெள்ளைக் காய்களுடன்
சிவப்பு நிற ராணிக்காயைப் பெற
போட்டி நடந்து கொண்டே இருக்கும்.
ஆனால் பல முறை
ராணி சிவப்பு காயை
பெற்ற பிறகும்
தோற்க நேரிடும்.
கோடை காலத்தில்
இப்படியே ஒரு மாலை நேரத்தில்
நாங்கள் எல்லோரும்
விளையாடிக் கொண்டிருந்தோம்.
இடையில் மாமி குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.
நிறுத்து விளையாட்டை,
அதிகம் விளையாடி விட்டீர்கள்.
ஆனால் அந்தக் குரலைக் கேட்காமல்
விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.
மாமி கோவத்துடன் வந்தார்.
மிகவும் பலமாக அடித்ததும்
காய்கள் சிதறின.
நாங்கள் திடுக்கிட்டு பிரமித்து விட்டோம்.
எங்கள் கேரம் விளையாட்டு
நின்று விட்டது.
இன்றும் அந்த நினைவுகள் வருகின்றன.
என் அன்பு மாமியின்
அன்பும் கொஞ்சுதலும்.
++++++++++++
ஹிந்தி மூலம்
இந்து காந்த் காங்கிரஸ்.
தமிழாக்கம்
பழனி
சே. அனந்த கிருஷ்ணன் சென்னை
No comments:
Post a Comment