गुल्लक
உண்டியல்.
குழந்தைப் பருவத்தில் உண்டியல்
நிரம்பும் முன்பே உடைக்கப்படும்.
சிலசமயங்களில்
பட்டம் வாங்க
மாஞ்சா நூல் வாங்க.
இன்று வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய்கள்
தேவைப்படும் போது
செலவு செய்யலாம்.
ஆனால் மண் உண்டியலில்
சேமித்த பணம்
உண்டியலை உடைத்து
பட்டம் மாஞ்சா வாங்க
எடுத்த போது
இருந்த இன்பம்
இன்று
ஆயிரம் ரூபாய்
கடைக்கு சென்று
பொருள் வாங்குவதில் இல்லையே.
+++++++++++
No comments:
Post a Comment