साईकिल
மிதிவண்டி.
இன்றும்
முதல் முதலில்
மிதிவண்டி ஓட்டிய
அந்த நாளை மறக்கவில்லை.
முதலில் மெதுவாக ஓட்டி முட்டியில் அடிபட்டு
தோலை கிழித்து
காலியான சாலையில்
மணி அடித்து
அந்த மணி இசையில்
ஆனந்தமடைந்து
மிதிவண்டி சக்கரம்
சுழல்வது போல்
இதயமும் துடிக்கும்.
இன்று மயிர் கூச்சம்
அடையும் அளவிற்கு
வேகமாக மகிழுந்து ஓட்டு கிறேன்.
ஆனால் அந்த
சிலிர்த்தல் இன்று இல்லை.
ஆனால் இன்று மிதிவண்டி
ஓட்ட முடியவில்லை என்ற வருத்தம்.
மிதிவண்டி ஓட்டும் வரைப் பார்த்து
வேதனைப் படுகிறேன்.
அந்த பழைய சிலிர்த்தலை
நினைவுபடுத்திக்
கொள்கிறேன்.
No comments:
Post a Comment